Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினை மன்னிப்பு கேட்க சொல்லுங்கள்… எச்சரித்து பேசிய குஷ்பூ …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக நிர்வாகி நடிகை குஷ்பு, நமது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் பிரதமர் கிட்ட பேசுகிறார். பிரதமருக்கு கடிதம் எழுதுகின்றார். பஞ்சாபில் பிரதமருக்கு பாதுகாப்பு இழப்பு ஏற்பட்டிருக்கிறது, பிரதமர் உயிருக்கு ஆபத்து வரும் அளவிற்கு பாதுகாப்பற்ற நிலை இருக்கிறதென்றால், ஏன் முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு கண்டன அறிவிப்பு கொடுக்கவில்லை,

ஏன் இதைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை ? ஏன் அவர் கேள்வி எழுப்பவில்லை ? முதல்வர் நவீன் பட்நாயகில்  இருந்து எல்லா மாநில முதலைச்சர்கள் இதை பற்றி பேசி இருக்கிறார்கள், ஏன் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ? எல்லாவற்றிக்கும் ஸ்டாலின் பேச்சு கொடுக்கிறார் அல்லவா ?

பிரதமருக்கு இப்படி பாதுகாப்பற்ற சூழல் நடந்துள்ளதற்கு கண்டனம் தெரிவிக்காத முதல்வர் முக.ஸ்டாலின் இதற்காக மன்னிப்பு கேக்க சொல்லுங்க, காங்கிரஸ் கூட்டணி இருக்கின்றோம், அதனால் ஒரு சப்போர்ட் வேண்டும். அதற்காக நீங்க இப்படியா ?  நாளைக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு எதுவும் நடக்ககூடாது, கடவுள் புண்ணியத்துல ஸ்டாலின் அவர்கள் நீண்ட ஆயுளோடு வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

ஏனென்றால் நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் தான். ஆனால் முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த மாதிரி ஒரு பாதுகாப்பு சூழ்நிலைப் ஏற்பட்டால் நாம யாரும் கண்டனம் தெரிவிக்க மாட்டோமா ?  நிச்சயம் கண்டனம் தெரிவிப்போம். அது தான் ஸ்டாலின் அவர்களிடமிருந்து இந்த சின்ன விஷயத்தை மட்டும் எதிர்பார்க்கிறோம். இதற்கு கண்டனம் தெரிவிங்க. பிரதமர் அவர்கள் பாஜக பிரதமர் என்று கிடையாது இந்த நாட்டோட பிரதமர், உங்களுடைய பிரதமர், மு க ஸ்டாலின் நம்ம முதலமைச்சருடைய பிரதமரும் நரேந்திர மோடி அவர்கள் தான் என தெரிவித்தார்.

Categories

Tech |