நீதிமன்றத்தின் அதிரடியான உத்தரவை தொடர்ந்து பல நோயால் வாடி வந்த கொலம்பியாவை சேர்ந்த முதியவர் ஒருவர் கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலம்பியாவில் 60 வயதாகின்ற விக்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இதயக்கோளாறு, சர்க்கரை மற்றும் நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளார். அதுமட்டுமின்றி இவரால் எழுந்து நடக்க முடியாததால் எப்போதும் விக்டர் வீல் சேர்லயே நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகையினால் விக்டர் சுமார் 2 வருடங்களுக்கு முன்பாக தன்னை கருணைக் கொலை செய்ய ஆணையிடும்படி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இதனை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இருப்பினும் விக்டர் விடாது தொடர்ந்து வழக்கு தொடுத்து அதில் வெற்றி பெற்றுள்ளார்.
ஆகையினால் நீதிமன்றம் விக்டரை கருணை கொலை செய்வதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி மருத்துவர்களால் விக்டர் கருணை கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக அவர் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியதாவது, நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் மக்கள் கஷ்டப்படுவதை கடவுள் ஒரு போதும் விரும்ப மாட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.