பிபிஎல் லீக் டி20 தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி வெற்றி பெற்றது.
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் நேற்று நடந்த 42-வது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் – பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கிறிஸ்டியன் 35 ரன்னும், ஜோஷ் பிலிப்பே 32 ரன்னும் எடுத்தனர்.
இதன்பிறகு 152 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி களம் இறங்கியது. இறுதியாக 19 ஓவரில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிரடியாக விளையாடிய ஆஷ்டன் டர்னர் அரைசதம் கடந்து அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்.