சிறுமியை திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள டி.ஒவுளாபுரத்தில் சூர்யா என்ற வாலிபர் வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து கடந்த ஆண்டு பெற்றோர்களின் எதிர்ப்புடன் திருமணம் செய்து கொண்டு இருவரும் சேலத்திற்கு சென்றனர். தற்போது சிறுமி கர்ப்பம் அடைந்ததால் மீண்டும் இருவரும் தேனிக்கு வந்துள்ளனர். இதனையடுத்து இருவரது பெற்றோரும் சிறுமியை பராமரிக்க மறுத்ததால் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் சூர்யா சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு 18 வயது பூர்த்தி அடையாததை அறிந்த மருத்துவர்கள் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் சிறுமியை திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கிய சூர்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமியை மீட்டு காப்பகத்தில் பத்திரமாக ஒப்படைத்துள்ளனர்.