Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமர் உயிருக்கு இல்ல!…. அவர் சேர்ருக்கு தான் ஆபத்து…. கிண்டல் செய்த முன்னாள் முதல்வர்….!!!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு பஞ்சாப் சென்றிருந்த நிலையில் பாதுகாப்பு குளறுபடி காரணமாக பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு டெல்லிக்கு திரும்பி சென்றுவிட்டார். மேலும் டெல்லிக்கு திரும்பி செல்லும் போது பிரதமர் மோடி அங்கிருந்து விமான நிலைய அதிகாரிகளிடம் நான் பஞ்சாபில் இருந்து பதிண்டா விமான நிலையத்திற்கு உயிருடன் வந்தடைந்ததற்கு உங்களுடைய முதல்வருக்கு நன்றி என்று கூறிவிட்டு சென்றுள்ளார். பிரதமர் மோடியின் இந்த வார்த்தை சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான திக்விஜய சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக பிரதமர் மோடியை கிண்டல் செய்து “நான் உயிருடன் திரும்பி விட்டேன். ஆனால் 700 விவசாயிகளை வீட்டுக்கு உயிருடன் திரும்பி செல்ல நான் விடவில்லை” என்ற கேப்ஷன் போட்டு மோடி டிராமா பேண்ட் கரோ, திரும்பி போ மோடி என ஹேஷ் டேக் பதிவு செய்துள்ளார். அதேபோல் மற்றொரு பதிவில் ‘பிரதமருக்கு ஆபத்து இல்லை! பிரதமரின் நாற்காலிக்கு மட்டுமே ஆபத்து!’ என்று கிண்டலாக எழுதி ஹிட்லரும் மோடியும் ஒன்று என்று ஹேஷ் டேக் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |