Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹாலிடே மூடில் ராகுல் காந்தி..! சோனியா மன்னிப்பு கேட்கணும்… குஷ்பூ விளாசல்!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் குஷ்பூ, பஞ்சாபில் நடந்த நிகழ்ச்விற்கு பொன்.ஆர் அவர்கள் சொன்ன மாதிரி  காங்கிரஸ் சார்பாக எங்களுக்கு மன்னிப்பு வேணும், ஓபன் பிளாட்பார்ம்ல மன்னிப்பு வேண்டும். ஏனென்றால் ராகுல் காந்தி அவர்கள் இன்னும் இத பத்தி எதுவுமே பேசுன மாதிரி என் கண்ணுக்கு படவில்லை, அவர் இன்னும் ஹாலிடே  மூடில் இருந்து வெளியில் வரல.

இந்தியால எது நடந்தாலும் அவர் ஹாலிடே மூட்ல  தான் இருப்பாரு. அவரு எப்போ ஆசை படுகிறாரோ, அப்போ தான் அவர் பேசுவார். அவர் இன்னும் இத்தாலில இருந்து வரல ஹாலிடே மூடில் இருந்து வெளியில வரல. இதுக்கு வந்து காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்கள் நிச்சயமாக ஒரு மன்னிப்பு கொடுக்கணும். பஞ்சாப்பின்  முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அவர்கள் அவருடைய பதவியில் இருந்து ராஜினாமா பண்ணனும், அவர் மன்னிப்பு கேக்கணும்.

இதெல்லாம் நடக்காத வரைக்கும் நாங்கள் இந்தியா முழுவதும் இப்படியே ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இப்படியே நாங்கள் போராடி கொண்டு இருப்போம். பிரதமரின் தமிழக வருகை இரத்தத்துக்கு பஞ்சாப் சம்பவம் காரணம் கிடையாதுங்க. கொரோனா பாதிப்பு அதிகமா இருக்கு.

இந்தியாவில் பஞ்சாப் முதலமைச்சர் மட்டும் தான் தலித்தா ? வேற மாநிலத்தில் தலித் சி.எம் கிடையாதா ? அவர்கள்  தப்பு பண்ணிட்டார்கள், மிகப்பெரிய தவறு நடந்துருக்கு அதை சமாளிப்பதற்கு இந்த அளவுக்கு இறங்கி பார்ப்பார்கள். காங்கிரஸ் தான் செஞ்ச தப்புக்கு அது சரி படுத்துவதற்கு….. நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று சொல்வதற்கு எந்த அளவுக்கும் இறங்கி போவதற்கு காங்கிரஸ் தயாராக இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |