நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி முதல் 15-18வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதத்திற்கு முன்பு வரை இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு இன்று முதல் மூன்றாவது தவணையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.
சென்னை எம்ஆர்சி நகரில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள், முன்கள மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தவணை செலுத்தி 9 மாதங்கள் முடிவடைந்தவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு எதுவும் அரசு அறிவித்துள்ளது.