இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,79,000 தொட்டுள்ளது. மேலும் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 5.9 லட்சத்தில் இருந்து 7.23 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 44,388 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.