Categories
கிரிக்கெட் விளையாட்டு

NZ VS BAN 2-வது டெஸ்ட் :126 ரன்னில் சுருண்டது வங்காளதேசம் …. நியூசிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு ….!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் வங்காளதேச அணி 126 ரன்னில் சுருண்டது. 

நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது .இதனிடையே இரு அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற  வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கேப்டன் டாம் லாதமின் 252 ரன்கள் எடுக்க நியூசிலாந்து அணி 521 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் பிறகு முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி தொடக்கத்திலேயே தடுமாறியது.

இதில் களமிறங்கிய ஷத்மன் இஸ்லாம் (7), முகம்மது நைம் (0), நஜ்முல் ஹசேன் (4), கேப்டன் மொமினல் ஹக் (0), லிட்டன் தாஸ் (8) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 10 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து திணறியது. இதன்பிறகு களமிறங்கிய  யாசிர் அலி 55 ரன்னும், நருல் ஹசன் 41 ரன்னும் எடுத்தனர்.இறுதியாக 41.2 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 126 ரன்னில் சுருண்டது. இதனால் 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதன்மூலம் வங்காளதேச அணி 395 ரன்கள் பின்தங்கி இருப்பதால். நியூசிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக காணப்படுகிறது.

Categories

Tech |