Categories
அரசியல்

நா சொன்ன அறிவுரையயும் கேட்டுருக்கீங்க…. எனக்கு ரொம்ப சந்தோஷம்…. முதல்வரை பாராட்டிய ஜெயக்குமார்….!!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் மு.க. ஸ்டாலின் தன் அறிவுரையை ஏற்றதற்கு மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார். 

தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக மளிகை பொருட்கள், கரும்பு மற்றும் வேட்டி சட்டை, போன்றவற்றை மக்களுக்கு கொடுத்து வருகிறது. அதில், பொங்கல் பொருட்கள் குறைவாக உள்ளது எனவும் அதற்கு பை கொடுப்பதில்லை என்றும் மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் பை தைப்பதற்கு தாமதமாகிறது என்று முதலமைச்சர் விளக்கம் அளித்திருக்கிறார்.

இந்நிலையில், அ.தி.மு.க. வின் முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது, “பொங்கல் பரிசு கொடுக்கப்பட்டதில் பாதி பொருளில்லை என்று மக்கள் தி.மு.க அரசை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனை அறிய வேண்டுமென்றால் மன்னர் காலத்தில் மன்னர் நகரத்திற்கு செல்வது போன்று சென்று, மக்களது மனநிலை மற்றும் திட்டத்தின் பயன்பாட்டை அறிந்து கொள்ளலாம் என்று நான் கூறியிருந்தேன். என் அறிவுரைக்கு ஏற்ப முதலமைச்சர் ஸ்டாலின், ரேஷன் கடைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டது  மகிழ்ச்சியை தருகிறது” என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |