ஈரோடு மாவட்டத்தில் ரூ.355.26 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திட்டங்களை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர், ஈரோடு மாவட்டம் திராவிட இயக்கத்தின் தாய் வீடு. மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் வழங்கப் பட்டுள்ளன என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் விழாக்களை விட மக்களின் உயிர்தான் முக்கியம் என்று முதல்வர் தெரிவித்தார். பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் கோவிட் மருத்துவமனை அமைக்கப்படும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிதி உதவி வழங்கி உள்ளன. ஈரோடு மாவட்டத்திற்கு மாபெரும் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் சாலையில் மற்றொரு பேருந்து நிலையம் அமைக்க உத்தேசம் உள்ளது. ஈரோட்டில் உள்ள சிக்கய நாயக்கர் கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றம் செய்யப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.