செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அகில இந்திய அளவில் ஒரு முக்கியமான நியூஸ் சேனல் ஒரு ஸ்டிங் ஆபரேஷன் ஒன்றை பதிவு செய்திருந்தார்கள். குறிப்பாக பஞ்சாப் அரசைப் பற்றி. இந்த பிரைவேட்
நியூஸ் சேன்னல் ஸ்டிங் ஆபரேஷனை எங்கு நடத்தினாங்க என்றால் ?
பாரத பிரதமர் அவர்கள் பெரோஸ்பூருக்கு சென்றிருந்த போது, பிரதமரின் கான்வாய் நிறுத்தப்பட்ட இந்த இடத்தில் அந்த நிலையத்திலிருந்த உயர் அதிகாரியிடம் ஸ்டிங் ஆபரேஷன் நடத்தும் போது, பல அதிர்ச்சிகரமான தகவல்கள் நமக்கு தெரிய வந்திருக்கின்றது.
மிக மிக அதிகமான தகவல் என்னவென்றால், உங்களுக்கு தெரியும் பஞ்சாப் அரசு சொன்னது போல பாரத பிரதமர் அவர்கள் பெரோஸ்பூருக்கு போயிருந்தபோது எதிர்ச்சியாக அங்கிருந்த போராட்டக்காரர்கள் வந்தார்கள் என்பது சுத்த பொய் என்பது தெரிந்துவிட்டது. குறிப்பாக அந்த பெரோஸ்பூர் மாவட்டத்தினுடைய ட்யூட்டி சூப்பிரண்டு போலீஸ் சொல்லியிருப்பது தெளிவாக இருக்கிறது.
ஜனவரி இரண்டாம் தேதி போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்ய தயாராக இருந்தார்கள். நான் என்னுடைய மேலதிகாரிகளுக்கு ஜனவரி இரண்டாம் தேதி, மூன்றாம் தேதி, நான்காம் தேதி தெரியப்படுத்தி இருந்தேன். என்னுடைய அட்டிஷனல் டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ் நாகேஸ்வரராவ் அவர்களுக்கு தெரிய படுத்திருந்தேன். அப்படி இருந்தும் கூட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று மேலிருந்து அறிவுறுத்தி இருந்தார்கள்.
அதனால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்கின்ற ஒரு அதிர்ச்சிகரமான தகவலை நமக்கு தெரியப்படுத்தி இருக்கின்றார்கள். இந்தியாவின் இறையாண்மையை கேள்விக்குறியாக்கி இருக்கக் கூடிய காங்கிரஸ் கட்சியைப் பற்றி தமிழகத்துக்கு சொல்ல வேண்டும் என்றுதான் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு என அண்ணாமலை தெரிவித்தார்.