Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கல்லூரி தேர்வுகள்…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது  பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆண்டு கட்டாயம் மாணவர்களுக்கு நேரடி செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று உயர் கல்வித் துறை திட்டவட்டமாக தெரிவித்தது. ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வருகின்ற 20-ஆம் தேதி நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சற்றுமுன் அறிவித்துள்ளார். அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு. கொரோனா தாக்கம் குறைந்த பிறகு தேர்வுகள் நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார் .

Categories

Tech |