Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹிட்மேன், ராகுல் வெறியாட்டம்… நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ… தொடரை சமன் செய்த இந்தியா..!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா   107 ரன்கள் வித்தியாசத்தில் அபார  வெற்றி பெற்றது. 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் உள்ள ACA -VDCA  அரங்கத்தில் நேற்று மதியம் 1: 30 மணிக்கு நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற  வெஸ்ட் இண்டீஸ் அணி  முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரரான ஹிட்மேன் ஷர்மா மற்றும் கே.ல்.ராகுல் களம் இறங்கினர். அதில் ரோஹித் ஷர்மா பொறுமையுடன் விளையாட அதே சமயத்தில் கே.ல்.ராகுல்  அதிரடியான தொடக்கத்தை  இந்தியாவிற்கு கொடுத்தார்.

Image result for ROHIT AND RAHUL OPENING IMAGES

அதனை தொடர்ந்து  ஷர்மா அதிரடியாக ஆட  ஆரம்பித்தார். முதலில்  லோகேஷ் ராகுல் 46 பந்தில்  50 ரன்கள்  அடித்து அரைசதத்தை பூர்த்தி செய்ய, ரோஹித் ஷர்மாவும்  67 பந்தில் 50 ரன்கள் அடித்துஅரைசதத்தை பூர்த்திசெய்தார். இருவரும் அற்புதமாக விளையாடினர். சதத்தை ரோகித் சதம் அடித்தது  மட்டும்மல்லாமல் சர்வதேச போட்டியில் ஒரே வருடத்தில் 10 சதத்தை அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை   பெற்றார்.

Image

 

அதற்கு பிறகு லோகேஷ் ராகுல் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால்  104 பந்தில் 102 ரன்கள் அடித்து அடுத்த பந்திலே ஆட்டம்  இழந்தார். இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 36. 6 ஓவரில் 227 ரன்கள் சேர்ந்திருந்தது. அதற்கு பிறகு இந்திய அணியின் முதுகெலும்பான கேப்டன் விராட் கோலி  முதல் பந்திலே  டக்  அவுட் ஆகி வெளியேறி மீண்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார்.

Image

2-வது விக்கெட்டுக்கு பிறகு ஸ்ரேயஸ் ஐயர் களம் இறங்கினார்.முதலில் பொறுமையாக விளையாடினார். ரோஹித் ஷர்மா தான் அதிரடியாக ஆடினார். அப்பொழுது ரோஹித்  138 பந்தில் 159 ரன்கள் அடித்து இரட்டை சதத்தை  அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு அவுட் ஆகி  கவலையுடன் வெளியேறினார்.

Image result for IND VS WI BCCI IMAGES
3-வது விக்கெட்டுக்கு பிறகு ரிஷப் பண்ட் களம் இறங்கினார். இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாட, முதலில் ஸ்ரேயஸ் ஐய்யர் 32 பந்தில் 53 ரன்கள் அதிரடியாக அரைசதத்தை  பூர்த்தி செய்தார். ஆனால் மறுமுனையில் ரிஷப்  பண்ட் வெறித்தனமாக 16 பந்தில் 39 ரன்கள் அடித்தார். இறுதியில் இந்திய அணி 388 என்ற அபாய இலக்காக  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நிர்ணயித்தது.

அதன் பின் குல்தீப் யாதவ்  33 ஓவரின் 4வது பந்தில் ஹோப்  (85 பந்தில் 78 ரன்கள் )  அவுட் ஆனார். 5-வது பந்தில் ஹோல்டர் டக் அவுட் ஆனார்.ஹாட்ரிக் பந்தை வீசிய  குல்தீப் யாதவ் .6-வது பந்தில் அல்சாரி ஜோசப் விக்கெட்டை  எடுத்து சர்வதேச போட்டிகளில்  ஹாட்ரிக்   விக்கெட்டை எடுத்த   இரண்டாவது  இந்திய அணி வீரர் என்ற பெருமையை பெற்றார். அவர் எடுத்த விக்கெட்டில் தான் வெஸ்ட் இண்டீஸ் அணி சரிவை  அடைந்தது.

Image

அதனுடன்   7-வது களம் இறங்கிய கீமோ  பால் அதிரடியாக விளையாடி 46ரன்களை  அடித்து  அவுட் ஆகாமல் முதல் அரைசதத்தை  அடிக்கும் வாய்ப்பை தவற விட்டார்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் வெஸ்ட் இண்டீஸ் அணியை சுலபமாக  வீழ்த்தி இந்திய அணி 107  ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி  பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி 43. 3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப்  மற்றும்  ஷமி தலா 3 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும்,  தாக்கூர் ஒரு 1 விக்கெட்டையும்  கைப்பற்றினார்கள்.

 

 

 

 

Categories

Tech |