செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, பஞ்சாப் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கின் தீர்ப்பில் சொல்லியிருக்கிறார்கள், மத்திய அரசு போட்டு இருக்கக்கூடிய குழுக்களும், மாநில அரசு போட்டு இருக்கக்கூடிய குழுக்களும் தனியாக எந்த விசாரணையும் செய்யக்கூடாது. பஞ்சாப் மாநில உயர்நீதிமன்றத்தின் ரிஜிஸ்டார் டாக்குமென்ட்களை பறிமுதல் செய்து உள்ளார்கள்.
சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி அவர்களை கொண்ட குழு அமைத்து உள்ளார்கள். அதனால் இந்த குழு கண்டிப்பாக கைப்பற்றபட்ட டாக்குமெண்ட் அனைத்தையும் பார்த்து, மிக முக்கியமாக யார் தவறு செய்து இருக்கின்றார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். எந்த தவறுமே செய்யவில்லை என்று சொன்ன பஞ்சாப் அரசு, இந்த சம்பவம் நடந்த 24மணி நேரத்திற்குள் பெராஸ்பூருடைய எஸ்.பியை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள்.
மூன்று நாட்களுக்கு முன்பு பஞ்சப் மாநிலத்தின் டிஜிபியை மாற்றியுள்ளார்கள். இது அனைத்துமே பஞ்சாப் அரசு தான் செய்துள்ளது, இரண்டு நாட்களாக தவறே இல்லை என்று சொன்னவர்கள். பத்திரிக்கை சந்திப்பு மூலமாக தமிழக மக்களுக்கு என்ன நடக்கிறது ? என்று சொல்லவேண்டும். இறையாண்மையை கேள்விக்குறியாக்கி இருக்கக்கூடிய தலைவர்கள் பேசுகின்ற கருத்துக்கள் எப்படி இருக்கின்றது ? என்று பாருங்கள்.
என்னைப் பொருத்தவரை பஞ்சாபின் உடைய முதலமைச்சர் சொன்ன காரணம் கண்டிப்பாக அது ஒரு பொய்யான காரணம் என்பது நமக்கு தெரிகிறது. ஏனென்றால் அன்றைக்கு சாயங்காலம் அவருடைய காரில் முகக்கவசம் போடாமல் பத்திரிகை நண்பர்களை பக்கத்தில் உட்கார வைத்து அவர் பேட்டி கொடுத்ததை அனைவரும் பார்த்தோம். அதற்குப் பிறகு அடுத்த நாள் வந்து சாலையோரம் சென்று டீ குடிப்பதையும் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்.
ஒருவேளை முதலமைச்சர் வரல, ஒரு காரணம் சொல்லி இருக்கிறார்கள் என்றால், எதற்காக டிஜிபியும் போகல, தலைமைச் செயலாளரும் போகல என்ற மிகப்பெரிய கேள்வியாக இருக்கின்றது. முதலமைச்சர் அவர்கள் டிஜிபி, தலைமைச் செயலாளரும் செல்ல வேண்டாம் என்று ஆணை பிறப்பித்து உள்ளாரா என்று நிறைய கேள்விகளும், மர்மங்களும் நமக்கு வருகிறது. இதை அரசியல் காரணத்திற்காக திட்டமிட்டு செய்துள்ளார்கள் என்று தெரிகிறது. அதே நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் ஜட்ஜ் அவர்கள் நிச்சயமாக நடுநிலையாக இதை முழுவதுமாக ஆராய்ந்து நல்ல முடிவு எடுப்பார்கள் என்பது நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்தார்.