Categories
அரசியல்

“இது என்ன புது ட்விஸ்ட்!”…. நாங்க எதிர்பாக்கவே இல்லையே…. ஈபிஎஸ்-கு ஆப்பா….? சசிகலாவுக்கு குஷிதா….!!

அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்திலிருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு வலது கையாக இயங்கிவந்த எஸ்.பி. வேலுமணி தற்போது ஓ பன்னீர்செல்வம் பக்கம் நிற்பதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த சமயத்தில், ஓ பன்னீர்செல்வம் தான் துணை முதலமைச்சராக இருந்தார்.

எனினும், எடப்பாடி பழனிச்சாமிக்கு அடுத்த நிலையில் கட்சி மற்றும் ஆட்சியில் எஸ்.பி வேலுமணி தான் அதிக ஆதிக்கத்தை செலுத்தி வந்திருக்கிறார். சமீபத்தில், சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அ.தி.மு.க வெளிநடப்பு செய்தது. அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர்களை சந்தித்தார்.

ஆனால், ஓ.பன்னீர்செல்வம் அவருடன் சேர்ந்து செய்தியாளர்களை சந்திக்கவில்லை. எஸ்.பி வேலுமணியும், ஓ.பன்னீர் செல்வத்துடன் சேர்ந்து சென்றுவிட்டார். அதன்பின், அவர்கள் இருவர் மட்டும் அறையில் காத்திருந்து, ஆளுநரை சந்தித்திருக்கிறார்கள். இது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவந்திருக்கிறது.

இதற்காக அவர் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது, முதல்வர் வேட்பாளர் தொடங்கி எதிர்க்கட்சி தலைவர் வரை அ.தி.மு.க.வில் நடந்த ஆலோசனைக் கூட்டம் அனைத்திலும், எடப்பாடி பழனிசாமி தான் ஆதிக்கம் செலுத்தினார். கட்சி நிர்வாகிகளும் அவருக்கு தான் ஆதரவு தெரிவித்தனர்.

ஓ.பன்னீர் செல்வத்தின் சத்தம் எடுபடவில்லை. இதற்கு, வேலுமணி, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தது தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தற்போது, அந்த வேலுமணி சசிகலாவை, கட்சியில் அனுமதிக்க பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்பட வாய்ப்பிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக சிக்கல் ஏற்படும் என்று அதிமுகவின் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

Categories

Tech |