Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த மரணம்…. இதற்கு ஒரு முடிவே இல்லையா?…. பெரும் பரபரப்பு சம்பவம்.. !!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்ட கலாசாரம் தலைதூக்க தொடங்கியுள்ளது. அதில் பணம், நகைகளை பலரும் இழந்துவருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சிலர் தற்கொலை செய்துகொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சென்னை கோயம்பேடு சேர்ந்த நபர் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து கடனாளியான காரணத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேடு பகுதியில் வசித்து வந்த தினேஷ் (41), இணைய மையம் எனப்படும் பிரவுசிங் சென்டர் நடத்தி வருகிறார். அவருக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் உள்ளது. அதில் அதிக ஆர்வம் காட்டி விளையாடியதால் அதிக அளவு பணத்தை இழந்துள்ளார்.

அதனால் அவருக்கு பல லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டதால் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து கடன் தொல்லையால் நேற்று இரவு தினேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனைக் கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தினேஷ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

Categories

Tech |