Categories
சினிமா

முதல் முதலாக….. தெலுங்கு திரையுலகில் கால் பதிக்கும் தளபதி…. வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் விஜய், முதல் முதலாக தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கமாக திரையுலகத்தை பொருத்தவரை நடிகர்கள் அவர்களது சொந்த மொழிப்படங்களில் நடித்து பிரபலமாகி விட்டால் அடுத்து, பிற மொழிகளில் நடிக்கத் தொடங்குவார்கள். அந்த வகையில் தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்கள், மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களும் மற்ற மொழித் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஆனால், தமிழ் திரையுலகில் டாப் நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் மட்டும் தற்போது வரை பிற மொழித் திரைப்படங்களில் நடித்ததில்லை. நடிகர் அஜித்குமார், “இங்கிலீஷ் விங்கிலீஷ்” என்னும் பாலிவுட் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஆனால், நடிகர் விஜய் மட்டும் தற்போது வரை மற்ற மொழித் திரைப்படங்களில் நடித்ததே இல்லை.

இதற்கு என்ன காரணம்? என்று தற்போது தெரிய வந்திருக்கிறது. அதாவது, மற்ற மொழி திரைப்படங்களில், இரண்டு கதாநாயகர்கள் நடிக்கும் படங்களுக்கு தான் அழைப்பு வருகிறது. அது மட்டுமல்லாமல், தமிழ்த் திரையுலகில் அவருக்கு இருக்கும் மரியாதை, பிறமொழிகளில் கிடைக்காது என்று அவர் நினைப்பதால், பிறமொழியில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், தற்போது முதன்முதலாக தெலுங்கு திரைப்படம் ஒன்றில் அவர் நடித்து வருகிறார்.  தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகும் ஒரு படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார். இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் வம்சி இயக்குகிறார்.

Categories

Tech |