Categories
மாவட்ட செய்திகள்

கொலையாளிகள் குண்டர் சட்டத்தில் கைது…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரிய கண்ணூர் கிராமத்தில் பிரவீன் என்பவர் வசித்து வந்துள்ளார்.  கடந்த ஆண்டு பிரவினை 5 பேர் கொண்ட மர்ம  கும்பல் வெட்டி  கொலை செய்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக், ராஜா, முத்துராஜா, பிரவீன், விஜய் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.   இதனையடுத்து குற்றவாளிகள் 5 பேரையும்  குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ்  கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்  அதிரடியாக  உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து குண்டர் தடுப்பு சட்டதின்  கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகலை  சிறையில் இருக்கும் குற்றவாளிகளுக்கு காவல்துறையினர் வழங்கியுள்ளனர்.

Categories

Tech |