Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “இடையூறுகளை உடனடியாக சரி செய்யுங்கள்”.. அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்ப உறுப்பினர் இயன்ற அளவில் உதவிகளை புரிவார்கள். தொழிலில் உருவாகிற இடையூறுகளை உடனடியாக சரி செய்வது சிறப்பு. குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். அதிகம் பயன்தராத பொருள்களை விலைக்கு வாங்க வேண்டாம். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமை காரணமாக அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி இருக்கும். நெருப்பு ஆயுதங்களை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் ஆவணங்களை கவனமாக வைத்துக் கொள்வது நன்மையை கொடுக்கும்.

இன்று எதிர்பாராத வகையில் உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். இன்று நட்பு மத்தியில் பெரிதாக மதிக்கப்படுவீர்கள். இன்று பெரியாரின் ஆலோசனை உங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும். அதேபோல திருமணமாகாதவர்களுக்கு திருமண முயற்சி கைகூடும். உடலில் வசீகரத் தன்மை கூடும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித பிரச்சினையும் இல்லை. நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கல்வியில் ஆர்வம் மிகுந்து இருக்கும். இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |