பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் சென்றிருந்த போது விவசாயிகள் வழிமறித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் அவருடைய பயணம் ரத்து செய்யப்பட்டு திரும்பி செல்லும் சூழ்நிலை உருவானது. இந்த சம்பவம் தேசிய அளவில் பேசும் பொருளாக மாறி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் பஞ்சாபில் ஆளும் கட்சியான காங்கிரஸ் பிரதமருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறி பாஜகவினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சேலம் சந்திப்பில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக ரயில் நிலையத்திற்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர். இந்த நிலையில் அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அர்ஜூன் சம்பத் உட்பட அனைவரையும் அதிரடியாக கைது செய்துள்ளனர்.