கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று நிகழ்வுகள் மாறுபட்டதாக அமையலாம். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய புதிய நுட்பங்களை பயன்படுத்துவது அவசியம். பணவரவை விட செலவு கொஞ்சம் கூடும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். இருந்தாலும் மருத்துவ சிகிச்சை கொஞ்சம் தேவைப்படும். அதாவது திடீரென்று வயிறு உப்புசம் போன்றவை இருக்கும். சரியான உணவை எடுத்துக் கொண்டால் எந்தவித பிரச்சினையும் இன்றைக்கு இருக்காது. இன்று குடும்பத்தில் மனநிறைவு ஏற்படும் வகையில் எல்லாம் நடக்கும்.
வாழ்க்கை துணையால் நன்மை உண்டாகும். குழந்தைகளுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். உறவினர் நண்பர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை கொஞ்சம் இருக்கும். அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். நிதானமாக செயல்படுங்கள். நண்பரிடம் வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக நீங்கள் செல்ல வேண்டும். தொலைபேசியில் பேசிக் கொண்டெல்லாம் செல்ல வேண்டாம். யாருக்கும் நீங்கள் தயவுசெய்து வாக்குறுதிகளை இன்று கொடுக்காதீர்கள். அதேபோல பணம் கடனாக வாங்காதீர்கள். நீங்களும் கடன் கொடுக்காதீர்கள்.
இந்த விஷயத்தில் ரொம்ப கடைபிடிக்க வேண்டும். அதாவது கவனத்தை கடைபிடிக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்