நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் ஜனவரி 10-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு மேலும் நீடிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி வருகின்ற 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். வருகின்ற 14ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை கோவில்களை மூட உத்தரவு. வழிபாட்டுத் தலங்களுக்கு 14 ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை செல்ல அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு வெளியூர் செல்லும் பேருந்துகளில் 75% இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து பயணிக்க அனுமதி.
ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகளும் தொடரும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு விதி மீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றாமல் தொடர்ந்து செயல்படும் வணிக நிறுவனங்களை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
வழிபாட்டு தலங்களுக்கு கட்டுப்பாடு:
தமிழகம் முழுவதும் வருகிற 14-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மக்களுக்கு அனுமதி இல்லை
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தொடரும்:
வருகிற 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
பொங்கல் பண்டிகை பேருந்துகளுக்கு கட்டுப்பாடு:
பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பேருந்துகளில் 75% பயணிகள் மட்டுமே அமர்ந்து பயணிக்க அனுமதி.
தமிழக அரசு அறிவுறுத்தல்:
மக்கள் அனைவரும் அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும். பொது இடங்களுக்குச் செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.