இந்தியாவில் மாதம்தோறும் அரசு ஓய்வூதியர்கள் மாதம்தோறும் வாங்கும் பென்சன் பணத்தை வங்கிகள் மூலம், இணையதளத்தில் பதிவு செய்து, அல்லது அஞ்சல் துறை மூலமாக பெற்று வருகிறார்கள். இந்த பென்சன் பணம் வாங்குவதற்கு ஓய்வூதியர்களுக்கு பயோமெட்ரிக் அடிப்படையிலான மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் மூலம் வழங்கப்படும்ள். இந்த உயிர் வாழ் சான்றிதழை ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே ஓய்வூதியர்களுக்கு பென்சன் பணம் தொடர்ந்து வழங்கப்படும். தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிற நிலையில் மூத்த குடி ஊழியர்கள் வங்கிகளுக்கும், அலுவலகங்களுக்கும் செல்வதற்கு சிரமப்படுகிறார்கள்.இனி வீடுகளுக்குச் சென்று மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் அளிக்கும் சேவையை அஞ்சல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சேவை இந்தியா போஸ்ட் வங்கி மூலம் அஞ்சல்துறை தொடங்கியுள்ளது. இந்தச் சேவை அஞ்சல் ஊழியர்கள், கிராமப்புற அஞ்சல் சேவகர்கள் மூலம் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது. இதுகுறித்து சென்னை நகர வடக்கு மண்டல அஞ்சலகங்களின் முதுநிலை மேற்பார்வையாளர் கூறியது, அஞ்சல் தகவல் மையம் அல்லது இணையதளத்தில் மூலம் வீடு தேடி சான்றிதழ் வழங்கும் சேவைக்கான வேண்டுகோளை பதிவு செய்யலாம். மேலும் மின்னணு சான்றிதழுக்கு என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த இணையதளம் இணைப்பு மூலம் உரிய படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.