கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் வம்சி முல்லா(33) என்பவர் வசித்துவருகிறார். இவன் ஹெடிகொன்டா கிராமத்தில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில் லோன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இவரது விண்ணப்பத்தை பரிசீலித்த வங்கி மேலாளர் கடன் தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த முல்லா, வங்கி கண்ணாடிகளை உடைத்து வங்கிக்குள் நுழைந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதனால் வங்கியில் இருந்த பெரும்பாலான பொருட்கள், பத்திரங்கள் எரிந்து சாம்பலாய் போனது. இதையடுத்து பொதுமக்கள் வருவதை பார்த்து விட்டு தப்பி ஓட முயற்சித்த முல்லாவை அப்பகுதியினர் பிடித்து அடித்து காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர்.