Categories
அரசியல்

நடிகை குஷ்புவுக்கு கொரோனா…. ‘இப்படியெல்லாம் இருங்க மேடம்’…. அட்வைஸ் பண்ண திமுக எம்எல்ஏ….!!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள குஷ்புவுக்கு திமுக எம்எல்ஏ ஆலோசனை கூறியுள்ளார்.

கொரோனா தொற்று மீண்டும் அசுர வேகத்தில் பரவத்தொடங்கியது. இந்தியாவில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி 22 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியிருந்தது. ஆனால் இன்று கொரோனா 1.79 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகமாகவே உள்ளது. நடிகர்கள் மகேஷ் பாபு, திரிஷா, விஷ்ணு விஷால், சத்யராஜ், அருண் விஜய், மீனா, ஷெரின் இசையமைப்பாளர் தமன் உட்பட பல்வேறு திரைப் பிரபலங்களும் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர் .இந்நிலையில், நடிகையும் பாஜக செய்தி தொடர்பாளருமான குஷ்புவும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தனிமையில் இருப்பது வெறுப்பாக இருக்கிறது. எனவே அடுத்த 5 நாட்களுக்கு என்னை ட்விட்டரில் தொடர்ந்து பொழுதை போக்க உதவுங்கள். உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் கொரோனா சோதனை கண்டிப்பாக மேற்கொள்ளுங்கள்.” என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள குஷ்புவுக்கு ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும் மருத்துவருமான எழிலன் ஆலோசனை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” தயவு செய்து கவனித்துக் கொள்ளுங்கள் மேடம் .. ஒரு கோவிட் சிகிச்சை மருத்துவர் என்ற முறையில், ஒரு நாளைக்கு மூன்று முறை உங்கள் ஆக்ஸிஜன் செறிவூட்டலைச் சரிபார்க்கும்படி அறிவுறுத்துகிறேன். அது 93 க்கு கீழே செல்லக்கூடாது. நீங்கள் விரைவில் குணமடைய ஆயிரம் சார்பாக இறைவனை பிரார்த்திக்கிறோம்.” என அவர் கூறியிருந்தார்.

Categories

Tech |