Categories
சினிமா

நெடுமுடி வேணு மரணம் …..! இந்தியன் 2 படத்தில் அவருக்கு ரீபிலேஸ் இவராம்…?  களமிறக்கும் இயக்குனர்….!!!

டைரக்டர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இந்தியன். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்திருந்தனர். ஆனால் சில காரணங்களுக்காக அது தள்ளி போக வேண்டியதாயிற்று. நடிகை காஜல் அகர்வால் திருமணமாகி கர்ப்பமாக இருப்பதால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். தொடர்ந்து காமெடி நடிகர் விவேக் மரணமடைந்து விட்டதால் அவருக்கு பதில் வேறு ஒரு கேரக்டரை தேடும் பணியில் டைரக்டர் சங்கர் தீவிரம் காட்டி வந்தார்.

தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் போலீஸ் அதிகாரியாக மலையாள நடிகர் நெடுமுடி வேணு நடித்திருந்தார் இந்நிலையில் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது இதனைத்தொடர்ந்து எதிர்பாராதவிதமாக அவர் திடீரென மரணம் அடைந்து விட்டார் இதனால் அவருக்கு பதிலாக எந்த நடிகரை போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்க வைப்பது என டைரக்டர் சங்கர் ஆலோசித்து வருகிறார். இதனை தொடர்ந்து நவரச நாயகன் கார்த்திக் அந்த கேரக்டரில் நடிக்க பொருத்தமானவர் என பலர் கூறி வருகின்றனர். கமலுக்கு இணையான நடிகர் அவர்தான் என்பது படப்பிடிப்பு குழுவினரின் எண்ணமாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |