Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால்…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…!!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்கள், தீபாவளி மற்றும் பொங்கல் மாதிரியான பண்டிகை காலங்களில் வழக்கத்தைவிட பேருந்துகளில் தேவை அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 13-ஆம் தேதி வரை 16,768 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4000 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து 10,300 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கேகே நகர், தாம்பரம் மற்றும் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்துகொள்ள மற்றும் புகார் தெரிவிக்க 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் 1800 425 6151, 044-2474 9002 என்ற கட்டணமில்லா எண்களில் புகார் அளிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |