Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களே…. இன்னும் ஒரு நாள்தான் இருக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் விருப்ப பணியிட மாறுதல் மற்றும் பொது மாறுதல் வழங்கப்படும். ஆனால் கடந்த ஆண்டிற்கான விருப்ப பணியிட மாறுதல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு காரணமாக நடத்தப்படவில்லை. இந்நிலையில் பொது மாறுதல் கலந்தாய்வு ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க வரும் ஆசிரியர்கள் வரும் 12ஆம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜனவரி 19ஆம் தேதிக்கு பதில் 24ஆம் தேதி முதல் பிப்ரவரி 23ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |