Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி விருது : டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் …. அஜாஸ் படேல் தேர்வு ….!!!

ஐசிசி-யின் டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர்,வீராங்கனைகள் தேர்வு செய்து ஐசிசி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் இந்திய வீரர் மயங்க் அகர்வால், நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இடம்பெற்றன.

இந்நிலையில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 10 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்த அஜாஸ் படேல் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |