ரஷ்யா உக்ரைன் நாட்டை கைப்பற்றும் நோக்கில் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யா தனது படைகளை ஐரோப்பிய நாடான உக்ரைனின் எல்லையில் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் அந்நாட்டை கைப்பற்றும் நோக்கத்தோடு ரஷ்யா பல விஷயங்களை தொடர்ந்து செய்து வருகிறது. இதற்கு அமெரிக்கா உட்பட பல நாடுகளும் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றன. அதோடு மட்டுமில்லாமல் அமெரிக்கா மற்றும் ரஷ்ய அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ரஷ்யா உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தோடு அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. அதேபோல் அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் சேர்ந்து ரஷ்யா மீது எதிர்கொள்ள முடியாத அளவிற்கு பொருளாதார தடைகளை விதிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.