சென்னையில் கேம் விளையாட செல்போன் தராததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வண்ணாரப்பேட்டையில் சிவா என்பவரின் மகன் விமல் குமார் (16) பிளஸ்-1 படித்து வந்தார். அவர் செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதனை பெற்றோர் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் விமல் அதிக நேரம் செல்போனில் கேம் விளையாடியதால் அவரது தாயார் செல்போனை பிடுங்கி மறைத்து வைத்துள்ளார். இதையடுத்து கதவை உள் பக்கமாக தாழிட்டு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது