நேற்று முன்தினம் வங்காளதேசத்தில் உள்ள காக்ஸ் பஜார் என்ற பகுதியில் அமைந்துள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 1,200 குடிசைகள் எரிந்து சாம்பலானதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேல் போராடி தீ அணைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தால் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்து நிற்கதியாக நிற்கின்றனர்.