Categories
தேசிய செய்திகள்

புதிய வடிவில் காலபைரவர்… வைரல் புகைப்படம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பாபா காலபைரவர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் முதல் முறையாக காலபைரவருக்கு புதிய அலங்காரம் செய்யப்பட்டது. அதாவது காவல்துறையினரர் சீருடை அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு ஒரு கையில் காவல்துறையினர் வைத்திருக்கும் தடிவைத்துள்ளார்.

மேலும் மற்றொரு கையில் புகார்களை பதிவு செய்வதற்கான நோட்டும் வைத்து கொண்டு புதிய வடிவில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த புதிய அலங்காரத்தில் பக்தர்கள் காலபைரவரை பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

Categories

Tech |