Categories
அரசியல் மாநில செய்திகள்

“தில்லுமுல்லு செய்யாம இவங்களால ஜெயிக்க முடியாது”…. அடிச்சு சொல்லும் மாயாவதி….!!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மார்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி தேர்தல் ஆணையத்தின் பயம் முழுவதும் அரசு இயந்திரத்தில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதேபோல் நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். மேலும் இந்த தேர்தலில் வாக்கு பதிவு எந்திரங்களில் முறைகேடு மற்றும் அரசு எந்திரங்களை தவறாக பயன்படுத்தாமல் இருந்தால் பாஜக நிச்சயம் தோல்வி அடையும் என்று மாயாவதி பரபரப்பாக பேசியுள்ளார்.

Categories

Tech |