கோவையில் உள்ள வெள்ளலூரில் மர்ம நபர்கள் சிலர் பெரியார் சிலைக்கு காவி பொடி தூவி, செருப்பு மாலை அணிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பெரியார் சிலை முன்பாக திரண்ட திராவிட கழகத்தினர் 10-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பெரியார் சிலை அவமதிப்பால் கொந்தளித்த திக தலைவர் கி.வீரமணி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் “தந்தை பெரியார் சிலை அவமதிப்பு தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. மேலும் குற்றவாளிகளுக்கு குறைந்த தண்டனையை வழங்குவதால் கயவர்கள் மேலும் உற்சாகம் அடைந்து வருகின்றனர். அதேபோல் குற்றவாளிகளுக்கும், அதன் பின்னணியில் இருப்பவர்களுக்கும் கட்டாயம் உரிய தண்டணை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தமிழ்நாட்டை ஆக்கிரமிப்பு செய்ய காவிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். எனவே இந்த பிரச்சனையை அரசு சாதாரணமாக எடுத்து கொள்ளாமல் முறையாக அணுக வேண்டும்” என்று வீரமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.