Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு சம்பவம்….!! கல்லூரி மாணவர் குத்தி கொலை….!! தேர்தலில் ஏற்பட்ட போட்டி…!!

கல்லூரி மாணவர் குத்தி கொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்திய மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இடுக்கி அரசு பொறியியல் கல்லூரியில் பி.டெக். 4ம் ஆண்டு படித்து வந்த மாணவர் தீரஜ் (21).
அவரது கல்லூரியில் மாணவர் தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அப்போது காங்கிரசைச் சேர்ந்த கே.எஸ்.யு. மாணவர் அமைப்பினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எஸ்.எப்.ஐ. மாணவர் அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது மோதலில் தீரஜ், அபிஷித், அமல் ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்தது.

இதில் தீரஜ் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்ற இருவரும் இடுக்கி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் இளைஞரணி பிரமுகரை இடுக்கி போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் தீரஜ் கொல்லப்பட்டுள்ளதற்கு முதல் மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |