இலங்கையின் சொகுசு ரயில் சேவை திட்டமானது, இந்திய அரசின் உதவியோடு தொடங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் சேவை துவங்கியிருக்கிறது. இந்த ரயில் தடமானது, தமிழ் மக்கள் அதிகம் வாழக்கூடிய யாழ்ப்பாணத்தை, தலைநகர் கொழும்புவுடன் சேர்க்கிறது. இதன் தொலைவு சுமார் 386 கிலோ மீட்டர் ஆகும். இலங்கையின், இந்த வளர்ச்சிக்காக இந்தியா, பெரிதும் உதவியிருக்கிறது.
கடன் அளித்ததுடன், டீசல் எந்திர ரயிலையும் இலங்கைக்கு வழங்கியிருக்கிறது. இந்தியாவின் தூதரக அதிகாரியான வினோத் கே ஜேக்கப், இந்த சொகுசு ரயில் சேவைக்கான தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அதன்பிறகு, மந்திரி பேசுகையில், “இந்தியா, இதுபோன்ற பல ரயில் சேவை திட்டங்களில் உதவியிருக்கிறது. இது இந்திய நாட்டுடனான தங்கள் நல்லுறவிற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இந்தியாவிற்கு நன்றி” கூறியிருக்கிறார்.