Categories
கிரிக்கெட் விளையாட்டு

NZ VS BAN 2-வது டெஸ்ட் :வங்காளதேசத்தை வீழ்த்தி ….தொடரை சமன் செய்தது நியூசிலாந்து …!!!

வங்காளதேச அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்து -வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 521 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் பிறகு முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி தொடக்கத்திலேயே தடுமாறியது. இறுதியாக 41.2 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 126 ரன்னில் சுருண்டது.

இதனால் 2-வது நாள் ஆட்டம் முடிவடைந்தது.இதையடுத்து பாலோ ஆன் ஆன நிலையில் வங்காளதேச அணி இன்று தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடியது. இதில் களமிறங்கிய முன்வரிசை வீரர்கள் நிலைத்த விளையாடவில்லை. ஒருபுறம் விக்கெட்டுகள் இலக்க மறுபுறம் நிலைத்து ஆடிய லிட்டன் தாஸ் 102 ரன்கள் குவித்தார். இறுதியாக 79.3  ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 278  ரன்கள் எடுத்தது. இதனால் இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இதில் ஆட்டநாயகன் விருது நியூசிலாந்து அணியின் கேப்டன்கேப்டன் டாம் லாதம்  மற்றும் தொடர் நாயகன் விருது கான்வே ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

Categories

Tech |