மெக்ஸிகோ நாட்டின் ஜனாதிபதிக்கு இரண்டாம் முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ நாட்டின் ஜனாதிபதியான, ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோ தன் இணையதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “எனக்கு இரண்டாவது தடவையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. லேசான அறிகுறிகள் தான் இருந்தது.
எனினும், என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். எனக்கு குணமாகும் வரை இணையதளம் வழியே பணியில் ஈடுபடுவேன். உள்துறை செயலாளரான, அடன் அகஸ்டோ லோபஸ் ஹெர்னாண்டஸ், எனது மற்ற பணிகளை செய்வார்” என்று தெரிவித்திருக்கிறார். இவருக்கு இதற்கு முன்பு, கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.