இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், அரசியல்வாதி, இலக்கியவாதி, தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கமல்ஹாசன் உலகநாயகன் குரலில் பாடிய சிறந்த 10 பாடல்கள் பற்றி பார்ப்போம்.
நாயகன் :-
1984-ல் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘நாயகன்’ திரைப்படத்தில் “தென்பாண்டி சீமையிலே” என்ற பாடலை கமல்ஹாசன் பாடியுள்ளார்.
மைக்கேல் மதன காமராஜன் :-
1990-ல் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான ‘மைக்கேல் மதன காமராஜன்’ என்ற படத்தில் “சுந்தரி நீயும் சுந்தரன் நானும்” என்ற பாடலை பாடி கமல்ஹாசன் வெற்றிகண்டார்.
குணா :-
1991-ல் சந்தானபாரதி இயக்கத்தில் வெளியான ‘குணா’ திரைப்படத்தில் “கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே” என்ற கமல்ஹாசனின் பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.
தேவர் மகன் :-
1992-ல் பரதன் இயக்கத்தில் வெளியான ‘தேவர் மகன்’ திரைப்படத்தில் “சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு” என்ற பாடலை எஸ்.பி.பியுடன் சேர்ந்து பாடியுள்ளார் கமல்ஹாசன்.
அவ்வை சண்முகி :-
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ‘அவ்வை சண்முகி’ படத்தில் “ருக்கு ருக்கு” என்ற பாடலை சுஜாதாவுடன் இணைந்து பாடியுள்ளார் கமல்ஹாசன்.
தெனாலி :-
2000-ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ‘தெனாலி’ திரைப்படத்தில் “இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ சேதி கேட்ட சந்தோஷங்கோ” என்ற பாடலை சித்ராவும் கமல்ஹாசனும் இணைந்து பாடியுள்ளனர்.
அன்பே சிவம் :-
2003-ல் சுந்தர்சி இயக்கத்தில் வெளியான ‘அன்பே சிவம்’ திரைப்படத்தில் “யார் யார் சிவம் நீ தான் சிவம்”, “எலே மச்சி மச்சி தல சுத்தி சுத்தி” என்ற இரு பாடல்களையும் கமல்ஹாசன் பாடியுள்ளார்.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் :-
சினேகா, பிரபு, நாகேஷ், கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ படத்தில் “கலக்கப்போவது யாரு” என்ற பாடலை கமல்ஹாசன் பாடியுள்ளார்.
விருமாண்டி :-
2004-ல் கமல்ஹாசனே இயக்கி நடித்துள்ள ‘விருமாண்டி’ என்ற திரைப்படத்தில் “உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை” என்ற பாடலை ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து பாடியுள்ளார் கமல்ஹாசன்.
விஸ்வரூபம் :-
2013-ல் கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில் “உன்னை காணாது நான் இன்று நானில்லையே” என்ற பாடலை சங்கர் மகாதேவனுடன் இணைந்து பாடியுள்ளார் கமல்ஹாசன்.