Categories
தேசிய செய்திகள்

யுபிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு….!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!

யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணயமான யுபிஎஸ்சி பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் தேசிய கப்பல்படை அகாடமியில் பணிபுரிய யுபிஎஸ்சி தேர்வு நடத்தி வருகிறது. இந்தாண்டிற்கான தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளது .

நேஷனல் டிபன்ஸ் அகாடமி மற்றும் நேவல் அகடமி 2022 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் யுபிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பிரத்யேக இணைய இணைப்பு upsc.gov.in தளத்தில் சென்று இன்று மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்கள் ஜனவரி 16 முதல் 24 ஆம் தேதிக்குள் திரும்பப் பெறப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |