Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. அரசின் நிபந்தனைகளும், அமைச்சரின் விளக்கமும்…. இதோ முழுவிபரம்….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது கூட்டுறவு வங்கிகளில் பெற்ற 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஆட்சியைப் பிடித்த திமுக, கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற தகுதி உடையவர்கள் கண்டறியப்பட்டு பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அவ்வகையில் 48,84,726 பேர் நகை கடன் பெற தகுதியுடையவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அதில் 35,37,093 பேர் நகை கடன் பெற தகுதி இல்லாதவர்களாக கருதி நீக்கப்பட்டனர்.

ஏனென்றால் நகை கடன் பெற தகுதியை கருத சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 சவரனுக்கு அதிகமாக நகை கடன் பெற்றவர்கள்,ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் வெவ்வேறு வங்கிகளில் நகை கடன் பெற்றவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 13,47,033 பேர் மட்டுமே நகை கடன் தள்ளுபடி பெற தகுதி உடையவர்களாக கருதி பெயர் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்த நிபந்தனைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் அனைவருக்கும் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி என்று அறிவித்துவிட்டு தற்போது பல நிபந்தனைகள் விதித்து குறைந்த அளவிலான மக்களுக்கு மட்டும் நகை கடன் தள்ளுபடி வழங்கியுள்ளது வருத்தத்தை அழைப்பதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

Categories

Tech |