Categories
மாநில செய்திகள்

சேவல் சண்டை நடத்த தடை…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போலவே தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டு பட்டியலில் கிடா முட்டு மற்றும் சேவல் சண்டை ஆகியவை இடம் பெறுகின்றன. தற்போது வரை கிராமங்களில் சேவல் சண்டையை பார்த்து ரசிப்பவர்கள் அதிகமாக உள்ளனர். அதன்படி தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் காலம் காலமாக சேவல் சண்டை நடந்து வருகிறது. இந்த ஆண்டு சேவல் சண்டை நடப்பதற்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து இந்த ஊரை சேர்ந்த தங்கமுத்து என்பவர் அனுமதி வழங்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு அளித்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் வருகின்ற ஜனவரி 17-ஆம் தேதி சேவல் சண்டை நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்து உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற 25ஆம் தேதி வரை சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் பூலாம்வலசு பகுதியில் சேவல் சண்டை நடத்த தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து வருகின்ற 25-ம் தேதி வரை சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |