விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில கூட்டம் மற்றும் காலண்டர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்துகொண்டு காலண்டர் வெளியிட்டார். அதன் பிறகு பேசிய அவர், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, திருமண பதிவு சான்றிதழ் ஆகியவற்றிற்காக வருபவரிடம் கனிவாகவும் பணிவுடனும் நடந்து கொள்ள வேண்டும். மேலும் இந்த கூட்டத்தில் தமிழகத்தில் அனைத்து அரசு பணியாளர்களின் சங்கங்களின் போராட்ட காலங்கள் பணிக்காலமாக வரன்முறைப்படுத்த வலியுறுத்த வேண்டும்.
அதனைத் தொடர்ந்து உறுப்பினர்களுக்கு குரூப் இன்சூரன்ஸ் அமைக்க சந்தா வசூல் செய்ய அதற்கென்று ஒரு குழு அமைக்க வேண்டும். விஏஓ பதவியை மீண்டும் டெக்னிக்கல் பதவி என அறிவிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் விஏஓக்கள் சட்டம் ஒழுங்கு குறித்து மற்றும் சான்றுகள் குறித்து களப்பணி விசாரணைக்கு சென்று வருவதற்கு உதவியாக அரசு இருசக்கர வாகனம் மற்றும் எரிபொருள் செலவினம் வழங்க வேண்டும் போன்ற 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.