Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நாயை விழுங்கிய 10 அடி நீள மலைப்பாம்பு… அதிர்ச்சியடைந்த வாலிபர்… தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

நாயை விழுங்கிய  10 அடி நீளமுடைய  மலைப்பாம்பை  தீயணைப்பு வீரர்கள் பிடித்துவிட்டனர்.`

மதுரை மாவட்டத்தில் உள்ள தேனடிக்குடிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு  ஒன்று நாயை  விழுங்கி கொண்டு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த   ஆடு மேய்த்த வாலிபர்   தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மலைப்பாம்பை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது அந்த மலைப்பாம்பு நாயை வெளியே கக்கியுள்ளது. இந்நிலையில் நீண்ட நேர முயற்சிக்கு பின்  கிராம மக்கள் உதவியுடன்  மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்துவிட்டனர். அதன்பின் மலைப்பாம்பு வலைச்சேரிபட்டி மலையில் கொண்டு விடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |