மின்வாரிய ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள பூசலப்புரம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சின்ன கட்டளை கிராமத்தில் அமைந்துள்ள மின்வாரியத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார்.இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரமேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த ரமேஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமேஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.