Categories
அரசியல்

“உதயநிதிக்கு டெய்லி டியூஷன் எடுக்கும் அதிகாரிகள்”….. ஓ இதுக்கு தானா….? நடத்துங்க…. நடத்துங்க….!!!!

உதயநிதி ஸ்டாலினுக்கு சில அதிகாரிகள் அரசியல் நடைமுறை தொடர்பில் பாடம் கற்றுக் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தல் முடிந்து, தி.மு.க தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்தது. அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த துறை கொடுக்கப்படும்? என்று கட்சி நிர்வாகிகளிடையே கேள்வி எழுந்தது. மு.க.ஸ்டாலின் இருந்த உள்ளாட்சித்துறை தான் வழங்கப்படும் என்றும் ஒரு கருத்து இருந்தது.

ஆனால், அமைச்சரவை பட்டியலில் உதயநிதி ஸ்டாலின் பெயர் இடம்பெறவில்லை. முதலமைச்சராக பதவியேற்றவுடன், “வாரிசு அரசியல்” என்ற பெயர் வரும் என்று, மு.க. ஸ்டாலின் அப்போது, இந்த முடிவை எடுத்தார். குடும்பத்தினர்கள் அழுத்தம் கொடுத்ததோடு, செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ், கே.என். நேரு, எ.வ. வேலு ஆகிய அமைச்சர்களும் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்றார்கள்.

எனவே, மு.க ஸ்டாலின், உதயநிதியிடம், “உன்னிடம் இருக்கும் திரைப்படங்களை விரைவாக முடித்து விட்டு வா” என்று கூறியிருக்கிறார். ஆனால், நவம்பர் மாதத்தில் மழை காரணமாகவும், அதன்பிறகு, கொரோனாவின் மூன்றாம் அலையாலும் அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் பதவிக்கு வருவது தாமதமானது.

எனவே, உதயநிதி ஸ்டாலினுக்கு அரசின் நடைமுறை மற்றும் அதன் நுட்பங்கள் தொடர்பில் சில அதிகாரிகள் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். முதல் தடவை முதலமைச்சராக பதவியேற்ற மு.க. ஸ்டாலின், பல வருட அனுபவமிக்கவர் போல நடந்துகொண்டது பலரால் பாராட்டப்பட்டது.

அமைச்சர், துணை முதலமைச்சர் போன்ற பல அனுபவங்கள் அவருக்கு இருந்தது. எனவே தான் முதல்வர் என்ற மிகப்பெரிய பொறுப்பை அவரால் சரியாக மேற்கொள்ள முடிந்தது. ஆனால், திரைப்படத்தில் மட்டுமே நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், சமீப வருடங்களாக தான் அரசியலுக்குள் வந்திருக்கிறார்.

எனவே, அவருக்கு அரசியல் நடைமுறை தொடர்பில் பாடம் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. அவருக்கு எந்த துறை வழங்கப்படும்? என்பது தற்போது வரை தீர்மானிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Categories

Tech |