Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி நடக்கும் விபத்துகள்…. விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள்…. கோரிக்கை விடுத்த பொதுமக்கள்….!!

விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப்பாதையாக உள்ளது. இந்நிலையில் இந்த வழியாக வரும் சில வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறி எதிர் திசையில் வருகின்றனர். இந்த ஒரு வழிப்பாதையில் நேர் எதிரே வாகனங்கள் இடைவிடாமல் வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

இதனால் விபத்து ஏற்படும் பகுதியாக மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே காவல்துறையினர் அப்பகுதியில் ஆய்வில் ஈடுபட்டு விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |