Categories
சினிமா தமிழ் சினிமா

‘புனித் ராஜ்குமாரின் கடைசி ஆசை’ ….குடும்பத்தினரின் அதிரடி முடிவு …. ரசிகர்கள் நெகிழ்ச்சி ….!!!

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி ஆசையினை நிறைவேற்ற அவருடைய  குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். 

கன்னடத் திரையுலகில் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் கடந்த ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி காலமானார்.இவருடைய மறைவு மொத்த திரையுலகினரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து கண்டீரவா ஸ்டுடியோ வளாகத்தில் அவருடைய தந்தை ராஜ்குமார் நினைவிடத்தின் அருகில் இவருடைய உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இவருடைய நினைவிடத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .இந்நிலையில் புனித் ராஜ்குமார் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு தனது தந்தை ராஜ்குமார் பிறந்த ஊரான காஜனூருக்கு சென்றுள்ளார்.

அங்குள்ள பாழடைந்த நிலையில் இருந்த வீடுகளை பார்வையிட்ட அவர், அதனை சீரமைத்து தனது தந்தை பெயரில் பெரிய நினைவில்லம் கட்டவும், அவருடைய புகழை பரப்ப அருங்காட்சியகம் அமைக்கவும் திட்டமிட்டிருந்தார். அதோடு கல்வி சார்ந்த பணிகளையும் தொடங்க இருந்தார். இந்த நிலையில் புனித் ராஜ்குமாரின் ஆசையை நிறைவேற்ற அவருடைய சகோதரர்கள் சிவராஜ்குமார் ராகவேந்திர ராஜ்குமார் இருவரும் முடிவு செய்துள்ளனர். மேலும் புனித் ராஜ்குமாரின் கடைசி ஆசையை நிறைவேற்ற அவருடைய குடும்பத்தினர் முயற்சி செய்து வருவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |